வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 24 பேர் உயிரிழப்பு

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 24 பேர் உயிரிழப்பு

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 24 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2017 | 8:28 am

டெங்கு காய்ச்சலை ஒழிப்பதற்காக 168 புதிய புகை விசிறும் உபகரணங்களை பயன்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவற்றுள் 18 பெரிய ரக புகை விசிறும் உபகரணங்களும் அடங்கியுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த உபகரணங்களை வாகனங்களுடன் பொருத்தி, பாரிய பிரதேசமொன்றை உள்ளடக்கும் வகையில் ஒரே முறையில் புகை விசிறல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பாரிய புகை விசிறும் உபகரணங்களை வாகனங்களுடன் பொருத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.

இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மேல் மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேல் மாகாணத்தில் 43.37 வீதமானவர்கள் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது.

இதுதவிர டெங்கு நோயாளர்கள் அதிகளவில் பதிவாகி வரும் கிண்ணியா வைத்தியசாலைக்கு விசேட வைத்திய குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 24 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை பதிவாகியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்