யாழ். இந்துக் கல்லூரியுடனான சினேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி வெற்றி

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2017 | 1:23 pm

யாழ். இந்துக் கல்லூரியுடனான சினேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி வெற்றியீட்டியது.

இந்த சினேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டி பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மைதானத்தில் இன்று (01) நடைபெற்றது.

போட்டியின் ஆரம்பம் முதலே திறமையாக விளையாடிய பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மாணவர்கள், முதற் சுற்றை 4 இற்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் கைப்பற்றினர்.

இரண்டாம் பாதியில் அவர்கள் மேலும் இரண்டு கோல்களை போட்டனர்.

எனினும் யாழ். இந்துக் கல்லூரி மாணவர்களால் கோல் போட முடியாமற் போனது.

அதன் பிரகாரம் 5 இற்கு பூஜ்ஜியம் என்ற கோல்கள் கணக்கில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, இந்த சினேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியில் வெற்றியீட்டியது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்