புதிய பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் பதவிப்பிரமாணம்

புதிய பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் பதவிப்பிரமாணம்

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2017 | 9:27 am

புதிய பிரதம நீதியரசராக , உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியசாத் டெப் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

பிரியசாத் டெப் இலங்கையின் 45 ஆவது பிரதம நீதியரசராக பதவியேற்றுள்ளார்.

முனனாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீ பவண் கடந்த 28 ஆம் திகதி ஓய்வு பெற்ற பின்னர் புதிய பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் நியமிக்கப்பட்டுள்ளார்.

2007 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆண்டுவரை அரச சொலிசிட்டர் ஜெனரலாக செயற்பட்டுள்ள பிரியசாத் டெப் பதில் பிரதம நீதியரசராகவும் பல தடவைகள் செயற்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்