தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இருந்து ஈராக்கை நீக்கினார் ட்ரம்ப்

தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இருந்து ஈராக்கை நீக்கினார் ட்ரம்ப்

தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இருந்து ஈராக்கை நீக்கினார் ட்ரம்ப்

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2017 | 10:50 am

விசா பெறுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நாடுகளின் பட்டியலில் இருந்து ஈராக்கை நீக்க ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றுக்கொண்ட பின் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.

அந்தவகையில் ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், அவர்கள் அமெரிக்கா வர தடைவிதிப்பதாகவும் அவர் பிறப்பித்த உத்தரவு உலகளவில் பெரும் கண்டனங்களுக்கு வழிவகுத்தன.

மேலும் அந்த உத்தரவிற்கு எதிராக அமெரிக்காவில் பெருமளவில் போராட்டங்கள் இடம்பெற்றன, நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டன.

அதில் ஒரு வழக்கை விசாரித்த சியாட்டில் மத்திய நீதிமன்ற நீதிபதி ஜேம்ஸ் ரொபர்ட், ட்ரம்பின் உத்தரவிற்கு அமெரிக்கா முழுவதும் தற்காலிக தடை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ட்ரம்ப் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நழக்கு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த 3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு ட்ரம்ப் தடை உத்தரவு தொடர்பாக சியாட்டில் மத்திய நீதிபாதி அளித்த தீர்ப்பிற்கு தடைவிதிக்க முடியாது என கூறி தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து ட்ரம்ப் மறு உத்தரவு பிறப்பிப்பார் அல்லது அதில் மாற்றங்களை கொண்டுவருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், ஈராக்கை தடைப்பட்டியலில் சேர்த்ததற்கு இராணுவ தலைமையகமான பென்டகன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆட்சேபனை தெரிவித்தன.

மேலும் அவை, இது குறித்து மறுபரிசீலனை செய்யும்படி ட்ரம்ப் நிர்வாகத்தை வலியுறுத்தி வந்ததை தொடர்ந்து ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்