சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்கள் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்கள் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2017 | 1:40 pm

நாட்டின் வடபகுதி கடல் எல்லைக்குள் பிரவேசித்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த 13 மீனவர்களையும் வெற்றிலைக்கேணி மற்றும் நெடுந்தீவு கடற்பரப்புகளில் இன்று (02) அதிகாலை கைதுசெய்துள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார்.

தமிழக மீனவர்களின் இரண்டு மீன்பிடி படகுகளும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மீனவர்கள் 13 பேரும் கடற்படையினரால் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை யாழ். மாவட்ட கடற்றொழில் அலுவலகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்