கொட்டகலையில் மாடிப்படியிலிருந்து தவறி வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

கொட்டகலையில் மாடிப்படியிலிருந்து தவறி வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Mar, 2017 | 3:53 pm

கொட்டகலை, ரொசிட்டா பகுதியில் கமலதாசன் வஸ்மிதா எனும் ஒன்றரை வயது குழந்தை மாடிப் படியில் இருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளது.

குழந்தையின் தாயும் பாட்டியும் வீட்டில் இருந்த சந்தர்ப்பத்திலேயே மாடிப் படியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறி வீழ்ந்துள்ளது.

நேற்றிரவு இந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறு குழந்தைகள் தொடர்பில் பெற்றோர் அதிகக் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் வலியுறுத்துகின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்