காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு பணிப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு: கைதான நபர் விடுவிப்பு

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு பணிப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு: கைதான நபர் விடுவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Mar, 2017 | 8:37 pm

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் மீதான துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் சந்தேகநபர் நேற்று (01) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் மாவட்ட பணிப்பாளர் விமல்ராஜ் மீது களுதாவளையில் வைத்து கடந்த மாதம் 22 ஆம் திகதி இரவு அடையாளந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், மாவட்ட செயலகத்தில் தனியார் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் நேற்று முந்தினம் (28) கைது செய்தனர்.

அதன் பின்னர் 48 மணிநேரம் தடுப்புக் காவலில் சந்தேகநபரை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியைப் பொலிஸார் பெற்றுக்கொண்டனர்.

மட்டக்களப்பு பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் காயமடைந்த காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் விமல்ராஜ், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]irst.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்