காணிகளை விடுவிக்கக் ​கோரி சீனியாமோட்டை, சூரிபுரம், கேப்பாப்பிலவு மக்கள் போராட்டம்

காணிகளை விடுவிக்கக் ​கோரி சீனியாமோட்டை, சூரிபுரம், கேப்பாப்பிலவு மக்கள் போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

02 Mar, 2017 | 8:05 pm

இராணுவத் தலைமையகம் அமைந்துள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்கள் நேற்று (01) ஆரம்பித்த போராட்டம் இன்றும் முன்னெடுக்கப்பட்டது.

சீனியாமோட்டை, சூரிபுரம், கேப்பாப்பிலவு ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 128 குடும்பங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இராணுவத் தலைமையகம் அமைந்துள்ள சுமார் 530 ஏக்கர் காணியை விடுவிக்கக்கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு இராணுவ முகாம் அமைந்துள்ள 19 ஏக்கர் நிலப்பரப்பு மூன்று கட்டங்களாக விடுவிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதில் முதற்கட்டமாக 7 ஏக்கர் காணியை எதிர்வரும் 4 ஆம் திகதி விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 20 குடும்பங்கள் அன்றைய தினம் சொந்த இடங்களுக்கு செல்ல முடியும் எனவும் மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் 28 ஆவது நாளாக சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்