கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தினுள் கைத்துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில்  20 பேர் கைது

கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தினுள் கைத்துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் 20 பேர் கைது

கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தினுள் கைத்துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் 20 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2017 | 9:58 am

கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தினுள் கைத்துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 20 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தி வளாகத்திலும், அந்த நேரத்தையொட்டி நீதிமன்றத்திற்கு வருகை தரவிருந்த சந்தேகத்திற்குரிய நபர்கள் சிலரே நேற்று (01) மாலை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர்களிடம் நேற்றிரவு விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சந்தேகநபர்களை கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் இன்று (02) ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, நீதிமன்றங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான பேச்சுவார்த்தைகளையும் துரிதமாக ஆரம்பிக்கவுள்ளதாக நீதிச் சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கல்கிஸ்ஸ நீதிமன்றத்தினுள் பயணப் பொதியொன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு கைத்துப்பாக்கிகளும், 10 ரவைகளும் கண்டெடுக்கப்பட்டதை அடுத்தே இந்த நிலைமை உருவாகியுள்ளது.

இதனையடுத்து நேற்றைய தினம் கல்கிஸ்ஸ நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு நேரிட்டது.

எனினும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுப்பது தொடர்பில் உன்னிப்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிச் சேவைகள் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்