கல்கிசை நீதிமன்ற வளாகத்திலிருந்து துப்பாக்கிகள் மீட்பு: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

கல்கிசை நீதிமன்ற வளாகத்திலிருந்து துப்பாக்கிகள் மீட்பு: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

கல்கிசை நீதிமன்ற வளாகத்திலிருந்து துப்பாக்கிகள் மீட்பு: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Bella Dalima

02 Mar, 2017 | 10:15 pm

கல்கிசை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 20 சந்தேகநபர்களும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கல்கிசை பிரதம நீதவான் மொஹமட் மிஹாமி முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இன்று இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், சந்தேகநபர்களின் உறவினர்களும் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் அங்கு அமைதியின்மை ஏற்பட்ட நிலையில், பொலிஸாரின் தலையீட்டில் நீதிமன்ற வளாகத்தில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

நீதிமன்ற வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கைதான 20 பேரில் இருவர் நீதிமன்ற வளாகத்தில் இருந்துள்ளதுடன், 10 பேர் திட்டமிட்டு அங்கு வருகை தந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இரத்மலானை – வெடகைய்யாவத்த பிரதேசத்தில் உள்ள ஒருவரே சந்தேகநபர்களை வழி நடத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்