கற்பாறைகள் சரிந்து வீழ்ந்ததால் மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து பாதிப்பு

கற்பாறைகள் சரிந்து வீழ்ந்ததால் மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து பாதிப்பு

கற்பாறைகள் சரிந்து வீழ்ந்ததால் மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2017 | 10:22 am

கற்பாறைகள் சரிந்து வீழ்ந்ததால், மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது.

தியத்தலாவை – பண்டாரவளை பகுதிகளுக்கு இடையிலும், ஒஹிய – இதல்கஸ்ஹின்ன பகுதிகளுக்கு இடையிலும் ரயில் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டிருந்ததாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

ரயில் பாதையில் நிரம்பியுள்ள கற்கள் மற்றும் மண் தற்போது அகற்றப்பட்டுள்ளதாகவும் கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், இன்று காலை 5.10 இற்கு கொழும்பு, கோட்டையை வந்தடையவிருந்த பதுளையில் இருந்து புறப்பட்ட இரவுநேர தபால் ரயில் மூன்றரை மணித்தியாலங்கள் தாமதத்தின் பின்னரே வந்தடைந்ததாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்