இராணுவத்திடம் சரணடைந்தவர்களை முன்னிலைப்படுத்துமாறு ஆட்கொணர்வு மனு: வழக்கு விசாரிக்கப்பட்டது

இராணுவத்திடம் சரணடைந்தவர்களை முன்னிலைப்படுத்துமாறு ஆட்கொணர்வு மனு: வழக்கு விசாரிக்கப்பட்டது

இராணுவத்திடம் சரணடைந்தவர்களை முன்னிலைப்படுத்துமாறு ஆட்கொணர்வு மனு: வழக்கு விசாரிக்கப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

02 Mar, 2017 | 5:44 pm

இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்த எழிலன் உள்ளிட்டவர்களை முன்னிலைப்படுத்துமாறு தொடரப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உட்பட சரணடைந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 12 பேரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அரச தரப்பில் பிரதி சொலிஸிட்டர் நாயகம் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதனையடுத்து, இந்த வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீதிபதி ஒத்திவைத்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்