அரசாங்கம் அதிகபட்ச கடன் மட்டத்தை அண்மித்துள்ளது – ஹர்ஷ டி சில்வா

அரசாங்கம் அதிகபட்ச கடன் மட்டத்தை அண்மித்துள்ளது – ஹர்ஷ டி சில்வா

எழுத்தாளர் Bella Dalima

02 Mar, 2017 | 8:19 pm

அரசாங்கம் அதிகபட்ச கடன் மட்டத்தை அண்மித்துள்ளதாக பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், 135 ஆகக் காணப்பட்ட இலங்கை ரூபாவின் பெறுமதி 150 ஆக மாறியுள்ள நிலையில், அதனை அந்த மட்டத்தில் பேண வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மொத்த தேசிய உற்பத்தியின் ஏற்றுமதி குறைவடைந்துள்ளதாகவும் மீண்டும் சமநிலையை ஏற்படுத்த வேண்டிய நிலை தோன்றியுள்ளதாகவும் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.

கடன் பெறுவதில் உள்ள எல்லை தமக்கு புலப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், முன்னைய அரசாங்கம் செய்த பாவச் செயல்களாலேயே இந்த நிலை தோன்றியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்