இன்ப்ளுயன்ஸா AH1N1  வைரஸ் தொற்று: மத்திய மாகாணத்தில் 3 மாதங்களில் 12 பேர் உயிரிழப்பு

இன்ப்ளுயன்ஸா AH1N1 வைரஸ் தொற்று: மத்திய மாகாணத்தில் 3 மாதங்களில் 12 பேர் உயிரிழப்பு

இன்ப்ளுயன்ஸா AH1N1 வைரஸ் தொற்று: மத்திய மாகாணத்தில் 3 மாதங்களில் 12 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

31 Mar, 2017 | 4:10 pm

மத்திய மாகாணத்தில் கடந்த மூன்று மாதங்களில் இன்ப்ளுயன்ஸா AH1N1 வைரஸ் தொற்றுக்குள்ளான 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 05 பேர் மாத்தளையைச் சேர்ந்தவர்கள் என மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சாந்தி சமரசிங்க குறிப்பிட்டார்.

இந்தக் காலப்பகுதிக்குள் 115 பேர் மத்திய மாகாணத்தில் இன்ப்ளுயன்ஸா AH1N1 வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அவர்களில் 40 பேர் கண்டியைச் சேர்ந்தவர்கள் எனவும் 23 பேர் மாத்தளையைச் சேர்ந்தவர்கள் எனவும் மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சாந்தி சமரசிங்க சுட்டிக்காட்டினார்.