H1N1 தொற்றுக்குள்ளான 15 பேர் பிபிலை வைத்தியசாலையில் சிகிச்சை

H1N1 தொற்றுக்குள்ளான 15 பேர் பிபிலை வைத்தியசாலையில் சிகிச்சை

By Bella Dalima

Feb 08, 2017 | 3:24 pm

H1N1 நோய்த்தொற்றுக்கு உள்ளான 15 பேர் பிபிலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் கர்ப்பிணிப்பெண் ஒருவரும் உள்ளதாக மொனராகலை மாவட்ட சுகாதார பணிப்பாளர் சுரங்க அபேசேகர குறிப்பிட்டார்.

பிபிலை வைத்தியசாலையின் விசேட பிரிவில் இவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு கொழும்பில் இருந்து விசேட வைத்திய நிபுணர்களை வரவழைத்து சிகிச்சை வழங்கி வருவதாகவும் மொனராகலை மாவட்ட சுகாதார பணிப்பாளர் சுரங்க அபேசேகர மேலும் குறிப்பிட்டார்.