ஜனாதிபதியால் ICTA வின் பணிப்பாளராக பரிந்துரைக்கப்பட்டவர் பிரதம நிறைவேற்று அதிகாரியானது எவ்வாறு?

ஜனாதிபதியால் ICTA வின் பணிப்பாளராக பரிந்துரைக்கப்பட்டவர் பிரதம நிறைவேற்று அதிகாரியானது எவ்வாறு?

எழுத்தாளர் Bella Dalima

28 Feb, 2017 | 5:55 pm

ICTA எனப்படும் இலங்கை தகவல் மற்றும் தொலைத்தொடர்பு முகவர் நிறுவனத்திற்கு முகுந்தன் கனகேயை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பி வைத்த பரிந்துரைக்கடிதம்  இன்று மாலை நியூஸ்பெஸ்ட்டிற்குக் கிடைத்தது.

முகுந்தன் கனகேயை பணிப்பாளராக மாத்திரம் நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுமதியளித்துள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளருக்கு, ஜனாதிபதி செயலகம் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளது.

முகுந்தன் கனகேயை ICTA நிறுவனத்தின் பணிப்பாளராக மாத்திரம் நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுமதியளித்துள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிப்பாளராக மாத்திரம் நியமிப்பதற்கான அனுமதியை ஜனாதிபதி வழங்கியிருந்த நிலையில், முகுந்தன் கனகே ICTA எனப்படும் இலங்கை தகவல் மற்றும் தொலைத்தொடர்பு முகவர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்