மலையகத்திலுள்ள ஏனைய மக்களுக்காக பணிபுரியும் சந்தர்ப்பத்தை மீண்டு மக்கள் எமக்கு வழங்கியுள்ளனர்

மலையகத்திலுள்ள ஏனைய மக்களுக்காக பணிபுரியும் சந்தர்ப்பத்தை மீண்டு மக்கள் எமக்கு வழங்கியுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

26 Feb, 2017 | 7:06 pm

மலையக மக்கள் முன்னணியின் தேசிய மாநாட்டின மூலமாக மலையகத்திலுள்ள ஏனைய மக்களுக்காக பணிபுரியும் சந்தர்ப்பத்தை மக்கள் மீண்டும் தமக்கு வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் மலையக மக்கள் முன்னணி தலைவராக செயற்படுவதற்கு தனக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் சந்திரசேகரனின் புதல்வி அனுஷியா சந்திரசேகரன்  தம்மோடு இணைந்து செயற்படவுள்ளதாகவும், அனைவரையும் இணைத்துக்கொண்டு நல்ல முறையில் மயைலகத்திற்காக செயற்படும் நம்பிக்கை உள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

ஹட்டன் கிருஷ்ணபவன் கலாசார மண்டபத்தில் இன்று (26) நடைபெற்ற மலையக மக்கள் முன்னணியின் தேசிய மாநாட்டின் போதே இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்தார்.

‘அர்த்தமுள்ள அடுத்த கட்டத்தை நோக்கி’ எனும் தொனிப்பொருளில், மலையக மக்கள் முன்னணியின் தலைவர், இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது.

இதன்போது, முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் பெ.சந்திரசேகரனின் மகளான அனுஷியா சந்திரசேகரன் கட்சியின் புதிய பிரதி செயலாளர் நாயகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்