பாடசாலைகளுக்கு இடையிலான றக்பி தொடரில் கொழும்பு ரோயல் கல்லூரி வெற்றி

பாடசாலைகளுக்கு இடையிலான றக்பி தொடரில் கொழும்பு ரோயல் கல்லூரி வெற்றி

எழுத்தாளர் Staff Writer

26 Feb, 2017 | 9:59 pm

பாடசாலைகளுக்கு இடையிலான றக்பி தொடரில் கொழும்பு ரோயல் கல்லூரி முதல் வெற்றியை பதிவு செய்தது.

கொழும்பு புனித ஜோசப் கல்லூரிக்கு எதிரான போட்டியை வெற்றிக் கொண்டதன் மூலமே கொழும்பு ரோயல் கல்லூரி இந்த தகுதிக்கு பாத்திரமானது.

பாடசாலைகளுக்கு இடையிலான றக்பி தொடரின் இவ்விரு அணிகளுக்குமிடையிலான போட்டி கொழும்பு ரோயல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கத்துடன் விளையாடிய கொழும்பு ரோயல் கல்லூரி வீரர்கள் முதல் பகுதியில் 08 புள்ளிகளை பெற்றனர்.

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி அணி வீரர்கள் முதல் பகுதியில் 05 புள்ளிகளை மாத்திரம் பெற்றனர்.

இரண்டாம் பகுதியில் சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்திய ரோயல் கல்லூரி வீரர்கள் மேலும் 20 புள்ளிகளை சுவீகரித்தனர்.

இரண்டாம் பகுதியில் ஜோசப் கல்லூரி அணி 17 புள்ளிகளை மாத்திரமே பெற்ற நிலையில் வெற்றி 28 இற்கு 22 என்ற புள்ளிகள் கணக்கில் கொழும்பு ரோயல் கல்லூரிக்கு உரித்தானது.

கொழும்பு ரோயல் கல்லூரி வீரர்கள் இந்தப் போட்டியில் பெற்ற 28 புள்ளிகளில் 03 ட்ரைகள் . 02 கோல்கள் மற்றும் ஒரு பெனால்டி பெறப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்