வௌ்ளவத்தை, பம்பலப்பிட்டியில் ஒன்றரை கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது

வௌ்ளவத்தை, பம்பலப்பிட்டியில் ஒன்றரை கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது

வௌ்ளவத்தை, பம்பலப்பிட்டியில் ஒன்றரை கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

25 Feb, 2017 | 4:13 pm

கொழும்பு – வௌ்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி பகுதியில் ஒன்றரை கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பம்பலப்பிட்டி ஹோட்டலொன்றுக்குள் ஒரு கிலோகிராம் ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 32 வயதான பாகிஸ்தான் பிரஜை இன்று புதுக்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, வௌ்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் 500 கிராம் ஹெரோயினுடன் 40 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்குளி பகுதியில் 3 கிலோகிராம் கேரளக்கஞ்சாவுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டியில் கேரளக்கஞ்சாவைக் கொண்டு சென்ற போதே அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மட்டக்குளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், முச்சக்கர வண்டி மற்றும் கைப்பற்றப்பட்ட கேரளக்கஞ்சாவும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்