வாகரையில் 32 வயதான நபர் கல்லில் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

வாகரையில் 32 வயதான நபர் கல்லில் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

வாகரையில் 32 வயதான நபர் கல்லில் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

25 Feb, 2017 | 3:51 pm

மட்டக்களப்பு – வாகரை, அம்பந்தாவெளி பகுதியில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த பகுதியிலிருந்த கிணற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கல்லொன்று கட்டப்பட்டவாறு சடலம் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அம்பந்தாவெளி, கதிரெவளி பகுதியைச் சேர்ந்த 32 வயதான நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் காணாமற்போயுள்ளதாக அவரின் குடும்பத்தினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்