ரஜினியின் ‘2.0’ படம் 350 கோடிக்கு காப்பீடு

ரஜினியின் ‘2.0’ படம் 350 கோடிக்கு காப்பீடு

ரஜினியின் ‘2.0’ படம் 350 கோடிக்கு காப்பீடு

எழுத்தாளர் Bella Dalima

25 Feb, 2017 | 6:34 pm

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‘2.0’. இதில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் நடிக்கிறார்.

லைக்கா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை 400 கோடி ரூபா செலவில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

இது இந்தியாவில் அதிக செலவில் தயாராகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்தப் படத்தை 350 கோடிக்கு (இந்திய ரூபா) தயாரிப்பு நிறுவனம் காப்பீடு செய்துள்ளது.

படப்பிடிப்பின் போது ஏற்படும் விபத்துக்கள், உயிரிழப்பு, பொருட்சேதங்கள் போன்றவற்றுக்கு இந்த காப்பீடு மூலம் இழப்பீடு பெற முடியும்.

சமீபத்தில் வேறு சில படங்களுக்காக நடந்த படப்பிடிப்பின் போது தீவிபத்து, உயிரிழப்பு போன்றவை ஏற்பட்டுள்ளன.

இது போன்ற பிரச்சினைகளால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டவே இந்த படம் காப்பீடு செய்யப்பட்டு இருப்பதாக தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்