மூன்று வாரங்கள் கடந்தும் எவ்வித தீர்வுமின்றி தொடர்கிறது கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்

மூன்று வாரங்கள் கடந்தும் எவ்வித தீர்வுமின்றி தொடர்கிறது கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

25 Feb, 2017 | 10:06 pm

சொந்த நிலங்களை விடுவிக்குமாறு கோரி இரவு பகலாக கேப்பாப்பிலவு மக்கள் வீதிகளில் இருந்து பேராட்டம் நடத்தி வருகின்றனர்.

எவ்வித தீர்வும் கிட்டாத நிலையில், முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்கள் தங்களின் காணி மீட்புப் போராட்டத்தை 26 நாட்களாக முன்னெடுத்து வருகின்றனர்.

கேப்பாபிலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இராணுவ முகாமை அகற்றக்கோரியும் புதுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்துள்ள சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 23 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

இந்நிலையில், கேப்பாப்பிலவு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இளைஞர்கள் சிலர் இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்