மட்டக்களப்பு காணி சீர்திருத்த ஆணைக்குழு பணிப்பாளருக்கு சத்திரசிகிச்சை: இதுவரை எவரும் கைதாகவில்லை

மட்டக்களப்பு காணி சீர்திருத்த ஆணைக்குழு பணிப்பாளருக்கு சத்திரசிகிச்சை: இதுவரை எவரும் கைதாகவில்லை

மட்டக்களப்பு காணி சீர்திருத்த ஆணைக்குழு பணிப்பாளருக்கு சத்திரசிகிச்சை: இதுவரை எவரும் கைதாகவில்லை

எழுத்தாளர் Bella Dalima

25 Feb, 2017 | 3:32 pm

துப்பாக்கிசூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இவர் சுய விருப்பின் பேரில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து நேற்று முன்தினம் மாலை வெளியேறியதாக களுவாஞ்சிக்குடி பொலிஸாரும், வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவரும் தெரிவித்துள்ளனர்.

எனினும், பணிப்பாளரைப் பாதுகாக்கும் நோக்கில், அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டார்.

விமல்ராஜ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில், குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இதனைத்தவிர, மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் தலைமையின் கீழ் ஐந்து பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு 60 மணித்தியாலங்கள் கடந்துள்ள போதிலும் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

ஜனவரி மாதம் 17 ஆம் திகதி ஏறாவூர் – புன்னக்குடா பகுதியில் அத்துமீறி காணிகளைக் கையகப்படுத்தும் நடவடிக்கையை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் அவர் தடுத்து நிறுத்தியிருந்தார்.

இந்த காணி அபகரிப்பு முயற்சி தொடர்பாக, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளுக்காகவும் நேசகுமார் விமல்ராஜ் ஆஜராகியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நேசகுமார் விமல்ராஜ் மீது கடந்த 22 ஆம் திகதி இரவு 7 மணியளவில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்