மட்டக்களப்பு காணி சீர்த்திருத்த ஆணைக்குழு பணிப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு: ருவன் விஜேவர்தன கருத்து

மட்டக்களப்பு காணி சீர்த்திருத்த ஆணைக்குழு பணிப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு: ருவன் விஜேவர்தன கருத்து

எழுத்தாளர் Bella Dalima

25 Feb, 2017 | 7:51 pm

காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன கடவத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டார்.

அரச அதிகாரிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாக இடமளிக்க முடியாதென இதன் போது அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்