பொலிஸ் விசேட படையினர் சுற்றிவளைப்பு: மணல் அகழ்வில் ஈடுபட்ட 15 பேர் கைது

பொலிஸ் விசேட படையினர் சுற்றிவளைப்பு: மணல் அகழ்வில் ஈடுபட்ட 15 பேர் கைது

பொலிஸ் விசேட படையினர் சுற்றிவளைப்பு: மணல் அகழ்வில் ஈடுபட்ட 15 பேர் கைது

எழுத்தாளர் Bella Dalima

25 Feb, 2017 | 4:04 pm

நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது மணல் அகழ்வில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செட்டிக்குளம், சம்மாந்துரை ஆகிய பகுதிகளில் மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட படையினர் குறிப்பிட்டனர்.

சட்டவிரோதமாக மணலை ஏற்றிச்சென்ற மூவர் மல்லாவி வீராட்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிண்ணியா – புளியடி பகுதியில் அகழ்வில் ஈடுபட்ட நிலையில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாங்குளத்திலும் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் – தப்போவ பகுதியில் சட்டவிரோதமாக மணலை ஏற்றிச்சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட படையினர் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்