பக்கசார்பற்ற சுயாதீன நீதித்துறையை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது: ஜனாதிபதி

பக்கசார்பற்ற சுயாதீன நீதித்துறையை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது: ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

25 Feb, 2017 | 8:19 pm

பக்கசார்பற்ற சுயாதீன நீதித்துறையை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி, கடந்த ஆட்சிக்காலத்தில் நீதித்துறை எதிர்நோக்கிய சவால்கள் குறித்து கருத்து வெளியிட்டார்.

பொலன்னறுவையில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டு விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ, பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்