சீனாவின் நட்சத்திர விடுதியில் பரவிய தீயால் 10 பேர் பலி

சீனாவின் நட்சத்திர விடுதியில் பரவிய தீயால் 10 பேர் பலி

சீனாவின் நட்சத்திர விடுதியில் பரவிய தீயால் 10 பேர் பலி

எழுத்தாளர் Bella Dalima

25 Feb, 2017 | 5:58 pm

சீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள நன்ச்சங் எனும் இடத்தில், நான்கு மாடி கட்டடத்தில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

HNA Hotel எனும் குறித்த விடுதியின் இரண்டாம் தளத்தில் தீ பற்றியுள்ளது.

கட்டடத்தினுள் பலர் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டதாகவும் தீச்சுவாலைக்குள் 7 பேரின் உடல்களை தீயணைப்புப் படையினர் கண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தீயினால் காயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விடுதி அமைந்துள்ள கட்டடம் மற்றுமொரு 24 மாடிக் கட்டடத்துடன் இணைந்து அமைந்துள்ளதாகவும், அங்கிருந்த சுமார் 260 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து தொடர்பில் 7 பேரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

CHINA-DISASTER_3137660g


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்