சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

25 Feb, 2017 | 3:16 pm

இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான வயதெல்லை 16 இல் இருந்து 15 வரை குறைக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மாணவர்களின் விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்து, பாடசாலை அதிபர்கள் அவற்றை ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு அனுப்புவது அவசியமாகும்.

பிரதேச செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தின் அலுவலகங்களிலும் இது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்