ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட சிரிய ஔிப்பதிவாளருக்கு அனுமதி மறுத்தது அமெரிக்கா

ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட சிரிய ஔிப்பதிவாளருக்கு அனுமதி மறுத்தது அமெரிக்கா

ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட சிரிய ஔிப்பதிவாளருக்கு அனுமதி மறுத்தது அமெரிக்கா

எழுத்தாளர் Bella Dalima

25 Feb, 2017 | 5:38 pm

ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட சிரியாவின் உள்நாட்டுப்போர் பற்றிய படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளருக்கு ஆஸ்கர் விருது விழாவிற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிரியாவின் உள்நாட்டுப்போர் தொடர்பாக வைட் ஹெல்மெட்ஸ் என்ற படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவாளரான 21 வயதான காலித் கதீப்பிற்கு தான் ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்கும் பொருட்டு அமெரிக்கா செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அவருக்கு விசா வழங்கப்பட்டதாகவும் கடைசி நேரத்தில், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புப் படையினரின் உத்தரவுப்படி காலீத், லாஸ் ஏஞ்சல்ஸ் செல்வதற்கு முன்னரே துருக்கி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

காலித்திற்கு எதிரான தகவல்கள் அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் தரப்பிற்கு கிடைக்கப்பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.

வைட் ஹெல்மெட்ஸ் திரைப்படம் சிரியாவின் உள்நாட்டுப் போரில் மீட்புப் பணியில் ஈடுபட்ட மீட்புப் படையினரின் பணிகளையும், அவர்கள் எவ்வாறு மக்களது உயிர்களைக் காக்கிறார்கள் என்பதையும் அவர்களுடனேயே பயணித்து விளக்குகிறது.

இப்படத்தை ஆர்லாண்டோ வோன் ஏயின்ஸ்டன் இயக்கியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்