வடகொரிய ஜனாதிபதியின் சகோதரர் கொலைக்கு நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் இரசாயனம் பயன்படுத்தப்பட்டுள்ளது

வடகொரிய ஜனாதிபதியின் சகோதரர் கொலைக்கு நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் இரசாயனம் பயன்படுத்தப்பட்டுள்ளது

வடகொரிய ஜனாதிபதியின் சகோதரர் கொலைக்கு நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் இரசாயனம் பயன்படுத்தப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

24 Feb, 2017 | 5:17 pm

வடகொரிய ஜனாதிபதியின் சகோதரர் கிம் ஜாங் நாம் அண்மையில் மலேசியாவில் கொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட இரசாயனப் பொருள் நரம்பு மண்டலத்தை நேரடியாகப் பாதிக்கும் ஒன்றென தற்போது மலேசிய பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

அவரது கண்ணிலிருந்து பெறப்பட்ட இரசாயன மாதிரியைப் பரிசோதித்ததில் இது தெரியவந்துள்ளது.

கோலாலம்பூர் விமான நிலையத்தில் காத்திருந்த கிம் ஜாங் நாமின் முகத்தில் இராசயனமொன்றை ஸ்பிரே செய்துவிட்டு பெண்கள் இருவர் தப்பிச் சென்றனர்.

அந்த இரசாயனத்தின் வீரியத்தினால் அவர் உடனடியாக உயிரிழந்தார்.

குறித்த இரசாயனம் பேரழிவு ஆயுதமென ஐக்கிய நாடுகள் சபையினால் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கொலை தொடர்பில் வட கொரியா மீது குற்றம் சுமத்தவில்லையெனினும், இதன் பின்னணியில் வடகொரியா உள்ளமை தெளிவாகத் தெரிவதாக மலேசியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிம் ஜாங் நாமின் முகத்தில் இராசயனத்தை ஸ்பிரே செய்ததாக சந்தேகிக்கப்படும் இரு பெண்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது சிறப்பாக திட்டமிடப்பட்ட தாக்குதல் எனவும் தாக்குதலை மேற்கொண்ட பெண்கள் நன்றாக பயிற்சி பெற்றவர்களாகத் தென்படுவதாகவும் மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்