யாழ்ப்பாணம் வடக்கு கடற்பகுதியில் கேரளக்கஞ்சாவுடன் ஐவர் கைது

யாழ்ப்பாணம் வடக்கு கடற்பகுதியில் கேரளக்கஞ்சாவுடன் ஐவர் கைது

யாழ்ப்பாணம் வடக்கு கடற்பகுதியில் கேரளக்கஞ்சாவுடன் ஐவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

24 Feb, 2017 | 5:37 pm

யாழ்ப்பாணத்தின் வடக்கு கடற்பகுதியில் கேரளக்கஞ்சாவுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து சுமார் 155 கிலோகிராம் கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளக்கஞ்சாவைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்