மட்டக்களப்பு  காணி சீர்த்திருத்த ஆணைக்குழு பணிப்பாளருக்கு பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை

மட்டக்களப்பு காணி சீர்த்திருத்த ஆணைக்குழு பணிப்பாளருக்கு பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை

மட்டக்களப்பு காணி சீர்த்திருத்த ஆணைக்குழு பணிப்பாளருக்கு பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை

எழுத்தாளர் Bella Dalima

24 Feb, 2017 | 3:34 pm

காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் பூரண பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நேசகுமார் விமல்ராஜின் பாதுகாப்பு நிமித்தம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

நேசகுமார் விமல்ராஜ் மீதான துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் இதுவரை 22 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

மேலும், சம்பவ இடத்தில் காணப்படும் CCTV காணொளிகளின் தரவுகளை சோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

இந்த துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் தலைமையின் கீழ் ஐந்து பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்றும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் மீது கடந்த 22 ஆம் திகதி இரவு 7 மணியளவில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது.

இதன்போது காயமடைந்த அவர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இதனை அடுத்து, நேசகுமார் விமல்ராஜ் தனிப்பட்ட விருப்பின் அடிப்படையில் நேற்று மாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து வெளியேறி பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்