பேஸ்புக் லைவ் வீடியோவில் 20 நொடி விளம்பர இடைவே​ளை

பேஸ்புக் லைவ் வீடியோவில் 20 நொடி விளம்பர இடைவே​ளை

பேஸ்புக் லைவ் வீடியோவில் 20 நொடி விளம்பர இடைவே​ளை

எழுத்தாளர் Bella Dalima

24 Feb, 2017 | 4:52 pm

பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்படும் லைவ் வீடியோவில் 20 நொடி விளம்பர இடைவேளை வருமென பேஸ்புக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ‘ரிகோட்’ என்ற இதழில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் இடையே காட்டப்படும் விளம்பரங்கள் போன்று இனி பேஸ்புக் லைவ் வீடியோக்களின் நடுவிலும் விளம்பரங்கள் காட்டப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த சேவையானது முதலில் அமெரிக்காவில் குறிப்பிட்ட ஒரு குழுவினரிடையே பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது.

இந்த விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருமானம், பயனாளர் மற்றும் பேஸ்புக் நிர்வாகத்திற்கு இடையே, 55:45 என்ற விகிதத்தில் பிரித்துக்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் லைவ் வீடியோ பதிவேற்றம் செய்யும் பயனாளர்களுக்கு வருமானம் ஈட்ட இது ஒரு நல்ல வாய்ப்பு என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிர்வாகத்தின் கொள்கையின் படி வீடியோ ஆரம்பித்து 20 நொடிகளுக்கு பிறகுதான் விளம்பரங்கள் தோன்றும். இரண்டு விளம்பரங்களுக்கு இடையே குறைந்த பட்சம் 2 நிமிடங்கள் இருக்கும்.

பயனாளர் குறைந்தபட்சம் நான்கு நிமிட லைவ் வீடியோவைப் பதிவேற்றம் செய்தால் மட்டுமே விளம்பர இடைவேளைகளைப் பெற முடியும்.

அதே நேரத்தில், அவரது வீடியோவுக்கு ஒரே நேரத்தில் 300 பார்வையாளர்களாவது இருக்க வேண்டும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்