பனியிலும் வெயிலிலும் தொடர்கிறது காணி மீட்புப் போராட்டம்

பனியிலும் வெயிலிலும் தொடர்கிறது காணி மீட்புப் போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

24 Feb, 2017 | 9:03 pm

கொட்டும் பனியிலும் வெயிலிலும் எவ்வித தீர்வும் கிட்டாத நிலையில், முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்கள் தங்களின் காணி மீட்புப் போராட்டத்தை 24 நாட்களாக முன்னெடுத்து வருகின்றனர்.

கேப்பாப்பிலவு விமானப்படை முகாமை அகற்றி, மக்களின் சொந்தக் காணிகளை விடுவிக்க வேண்டும் என்பதே இந்த மக்களின் ஒரே கோரிக்கையாகவுள்ளது.

கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இராணுவ முகாமை அகற்றக்கோரியும் புதுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்துள்ள சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 22 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டது.

தங்களின் கோரிக்கைக்கு தீர்வு கிட்டும் வரை போராட்டம் கைவிடப்பட மாட்டாது என புதுக்குடியிருப்பு மக்கள் குறிப்பிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்