பணியாளரின் காலைக் கட்டிக்கொண்டு விளையாடக் கெஞ்சும் பென்டா கரடிக்குட்டி (Video)

பணியாளரின் காலைக் கட்டிக்கொண்டு விளையாடக் கெஞ்சும் பென்டா கரடிக்குட்டி (Video)

எழுத்தாளர் Bella Dalima

24 Feb, 2017 | 4:26 pm

மனிதர்களைப் போல விலங்குகளுக்கும் பாசமுண்டு என்பதை பல்வேறு நிகழ்வுகள் மெய்ப்பித்து வருகின்றன.

சீனாவின் செங்டு பாண்டா இனப்பெருக்க ஆராய்ச்சி மையத்தில், பணியாளர் ஒருவர் வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது அங்குள்ள பென்டா கரடிக்குட்டி ஒன்று அவரை வேலை செய்ய விடாமல் தன்னுடன் விளையாடுவதற்காக அவரின் காலைக் கட்டிக்கொள்கிறது.

குழி தோண்டி மூங்கில்களை நட்டுக்கொண்டிருக்கும் பணியாளர் தனக்கு நேரமில்லாத காரணத்தால், அந்தக் குட்டியை தூக்கி சற்று உயரத்தில் வைத்து விட்டு தனது வேலையைத் தொடர்கிறார். ஆனால், மேலிருந்து கீழே இறங்கி வரும் கரடிக்குட்டி மீண்டும் அவரது காலைக் கட்டிக்கொள்கிறது.

இதுபோல மூன்று முறை உயரத்தில் விட்டும் பெண்டா கீழிறங்கி வந்து அவரது காலைக் கட்டிக்கொள்கிறது.

பார்ப்பவர்களின் மனதை உருகச்செய்யும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்