பகிடிவதையில் ஈடுபட்டால் புலைமைப்பரிசிலை நிறுத்த நடவடிக்கை

பகிடிவதையில் ஈடுபட்டால் புலைமைப்பரிசிலை நிறுத்த நடவடிக்கை

பகிடிவதையில் ஈடுபட்டால் புலைமைப்பரிசிலை நிறுத்த நடவடிக்கை

எழுத்தாளர் Bella Dalima

24 Feb, 2017 | 3:21 pm

பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

மாணவர்களிடையே நடத்தப்படும் பகிடிவதையை நிறுத்துவதற்கு பல்கலைக்கழகத்திற்குள் சிவில் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் மொஹான் டி சில்வா குறிப்பிட்டார்.

அண்மையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை சம்பவமொன்று பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழக மாணவர்கள் சிலரைப் பாழடைந்த வீடொன்றுக்குள் வைத்து பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவம் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலான ஆவணங்கள் தமக்குக் கிடைத்துள்ளதாகவும் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்தார்.

பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் குறித்த சம்பவம் ஔிப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த பகிடிவதை சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கக்கூடிய சாட்சியமாக அந்த ஔிப்பதிவு காணப்படுவதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 15 மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்