சட்டவிரோதமாக படகு மூலம் நியூசிலாந்திற்கு பயணிக்கவிருந்த 18 பேர் கைது

சட்டவிரோதமாக படகு மூலம் நியூசிலாந்திற்கு பயணிக்கவிருந்த 18 பேர் கைது

சட்டவிரோதமாக படகு மூலம் நியூசிலாந்திற்கு பயணிக்கவிருந்த 18 பேர் கைது

எழுத்தாளர் Bella Dalima

24 Feb, 2017 | 3:46 pm

சட்டவிரோதமாக படகு மூலம் நியூசிலாந்திற்கு பயணிக்கவிருந்த 18 பேர் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு – லெல்லம பகுதியில் சந்தேகநபர்களும் அவர்கள் பயணித்த வேன் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் சமிந்த வலாகுலகே தெரிவித்தார்.

கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய பொலிஸாருடன் இணைந்து கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள 18 பேரில் 15 பேர் தமிழர்கள் எனவும் கடற்படை பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்