காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி கிளிநொச்சி, வவுனியாவில் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி கிளிநொச்சி, வவுனியாவில் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி கிளிநொச்சி, வவுனியாவில் போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

24 Feb, 2017 | 8:23 pm

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று முதல் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

A9 வீதியிலுள்ள அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடியறியும் சங்கத்தினரால் இந்த சுழற்சிமுறை உண்ணாவிரதப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவைத் தெரிவிக்க வேண்டும் எனவும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனவும் போராட்டகாரர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவர்கள் கடந்த 5 நாட்களாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்