களுத்துறை கடலில் விபத்திற்குள்ளான படகை செலுத்திய இளைஞர் கைது

களுத்துறை கடலில் விபத்திற்குள்ளான படகை செலுத்திய இளைஞர் கைது

களுத்துறை கடலில் விபத்திற்குள்ளான படகை செலுத்திய இளைஞர் கைது

எழுத்தாளர் Bella Dalima

24 Feb, 2017 | 3:54 pm

களுத்துறை – கட்டுகுருந்த கடலில் விபத்திற்குள்ளான படகை செலுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேருவளை துறைமுகத்தில் வைத்து நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பேருவளையிலிருந்து கட்டுகுருந்த நோக்கி கடந்த 19 ஆம் திகதி மத வழிபாட்டிற்காகப் பயணித்த படகொன்று கடலில் மூழ்கி விபத்திற்குள்ளானது.

இதன்போது படகில் பயணித்த சிறுவர்கள் உள்ளிட்ட 16 பேர் உயிரிழந்தனர்.

மேலும் பலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அளவுக்கு அதிகமானவர்களை ஏற்றிச்சென்றமையே படகு விபத்திற்குள்ளானமைக்கான காரணம் என பொலிஸார் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்