இந்துக்கள் அனுஷ்டிக்கும் புண்ணிய நாளில் அவர்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும்: ஜனாதிபதி

இந்துக்கள் அனுஷ்டிக்கும் புண்ணிய நாளில் அவர்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும்: ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

24 Feb, 2017 | 3:09 pm

ஒழுக்க சீலரான மனிதராக அனைவரும் வாழ வேண்டும் என்பதே அனைத்து மதங்களாலும் முன்னிலைப்படுத்தப்படும் நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மகா சிவராத்திரி விரதம் தொடர்பில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விரதமிருந்து கண்விழித்து சிவனின் ஆசிர்வாதத்தைப் பெறுவதற்கு இந்துக்கள் அனுஷ்டிக்கும் இந்த புண்ணிய நாளில் அவர்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மத சிந்தனை, கலாசாரம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் ஐக்கியத்தைக் கட்டியெழுப்பி நல்லிணக்கத்துடன், முக்திபெறும் முனைப்புடன் அனுஷ்டிக்கப்படும் மகா சிவராத்திரி தினத்தில் இலங்கைவாழ் இந்துக்கள் மற்றும் அனைத்து மக்களுக்காக தாமும் பிரார்த்திப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மகா சிவராத்திரி தொடர்பில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்