ஆட்கடத்தற்காரர்களைக் கைது செய்ய பொலிஸார் சுற்றிவளைப்பு

ஆட்கடத்தற்காரர்களைக் கைது செய்ய பொலிஸார் சுற்றிவளைப்பு

எழுத்தாளர் Bella Dalima

24 Feb, 2017 | 7:54 pm

ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்களைக் கைது செய்வதற்காக பொலிஸார் தற்போது சுற்றிவளைப்புகளில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக நியூசிலாந்திற்குப் படகு மூலம் பயணிக்கவிருந்த 18 பேர், நீர்கொழும்பில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதை அடுத்து, ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீர்கொழும்பு – லெல்லம பகுதியில் சந்தேகநபர்களும் அவர்கள் பயணித்த வேன் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் சமிந்த வலாகுலகே தெரிவித்தார்.

கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய பொலிஸாருடன் இணைந்து கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக நியூஸிலாந்திற்கு செல்ல முயற்சித்த 8 பேர் நீர்கொழும்பு – கதிரான பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு, கல்முனை, நீர்கொழும்பு மற்றும் மாரவில ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்