English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
23 Feb, 2017 | 3:20 pm
சாம்சங் நிறுவனம் அதன் புதிய கேலக்ஸி S8, கேலக்ஸி S8 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது.
இவற்றின் விலை மற்றும் நிற வகைகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த இரண்டு வகை ஸ்மார்ட்போன்களும் கறுப்பு, ஆர்க்கிட் சாம்பல் மற்றும் பொன்னிறத்தில் கிடைக்கவுள்ளன.
சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் $950 விலையிலும் கேலக்ஸி S8 ப்ளஸ் ஸ்மார்ட்போன் $1050 விலையிலும் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒற்றை சிம் கொண்ட சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் அண்ட்ரோய்ட் 7.0 நெளகாட் மூலம் இயங்கும் எனவும் இதில் 2160×3840 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.50 அங்குல முழு HD ட்ரிலுமினோஸ் டிஸ்ப்ளே உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் உடன் இணைந்து குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 ப்ரொஸசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் மைக்ரோ SD அட்டை வழியாக 128 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. LDE ஃபிளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் (குறிப்பிடப்படாத) மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமராவைக் கொண்டுள்ளது.
இந்த செல்பேசி 3000mAh பேட்டரி திறன் மூலம் இயங்கும் எனவும் ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத், ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி எல்டிஇ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒற்றை சிம் ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் ஸ்மார்ட்போன் அண்ட்ரோய்ட் 7.0 நெளகாட் மூலம் இயங்கும் எனவும் இதில் 2160×3840 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.20 அங்குல முழு HD ட்ரிலுமினோஸ் டிஸ்ப்ளே இடம்பெறும் எனவும் இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் உடன் இணைந்து குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 ப்ரொஸசர் மூலம் இயக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது மைக்ரோ SD அட்டை வழியாக 128 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி S8 ப்ளஸ் ஸ்மார்ட்போன், LDE ஃபிளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் (குறிப்பிடப்படாத) மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமராவைக் கொண்டிருக்கும்.
இது 3000mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத், ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி எல்டிஇ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை உள்ளடக்கப்படவுள்ளன.
27 Nov, 2018 | 10:44 PM
18 Jul, 2018 | 03:23 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS