வித்தியா கொலைச் சந்தேகநபர்களில் ஒருவர் அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ளார்

வித்தியா கொலைச் சந்தேகநபர்களில் ஒருவர் அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ளார்

எழுத்தாளர் Staff Writer

22 Feb, 2017 | 1:22 pm

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஒருவர் அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ளார்.

வழக்கின் 11 ஆம் இலக்க சந்தேகநபரே அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ளதாக ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.ரியால் இன்று
(22) அறிவித்துள்ளார்.

அரச தரப்பு சாட்சியாளராக மாறும் பட்சத்தில் பொது மன்னிப்பு வழங்கப்படும் என சட்ட மாஅதிபர் திணைக்களத்தினூடாக வழங்கப்பட்ட அறிவுருத்தலுக்கு அமைய, சந்தேகநபர் அரச தரப்பு சாட்சியாளராவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சந்தேகநபர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் மறுநாள் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்