வறட்சி காரணமாக 14 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பாதிப்பு

வறட்சி காரணமாக 14 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Feb, 2017 | 7:28 am

வறட்சி காரணமாக 14 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதிய எட்டு இலட்சத்து 99,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை,பதுளை, குருநாகல், புத்தளம் மாத்தளை உள்ளிட்ட மாவட்டங்களின் சில பிரதேங்கள் வறட்சியினால் பாதிக்கப்டப்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண உதவிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இடர்முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்