மத சகிப்புத்தன்மைக்கு ஆதரவு வழங்குமாறு ட்ரம்பின் மகள் இவான்கா அழைப்பு

மத சகிப்புத்தன்மைக்கு ஆதரவு வழங்குமாறு ட்ரம்பின் மகள் இவான்கா அழைப்பு

மத சகிப்புத்தன்மைக்கு ஆதரவு வழங்குமாறு ட்ரம்பின் மகள் இவான்கா அழைப்பு

எழுத்தாளர் Bella Dalima

22 Feb, 2017 | 4:01 pm

யூத சமூகத்திற்கு எதிராக அச்சுறுத்தல் தொடர்வதையடுத்து மத சகிப்புத்தன்மைக்கு ஆதரவு வழங்குமாறு ட்ரம்பின் மூத்த மகளான இவான்கா ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

இவான்கா ட்ரம்ப் திங்களன்று பதிவிட்ட மத சகிப்புத்தன்மை பற்றிய ட்வீட்தான் அமெரிக்க மக்களிடையே தற்போதைய விவாத பொருளாக மாறியுள்ளது.

இவான்கா ட்ரம்பின் கணவரான ஜார்ட் குஷ்னர் யூத மதத்தைச் சேர்ந்தவர். திருமணத்தின்போது இவான்கா ட்ரம்ப் யூத மதத்திற்கு மாறியவர். இவான்கா ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் பெண் வர்த்தக சபை உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.

திங்கட்கிழமை உலக நாடுகளின் 11 வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்ட குண்டு வெடிப்புகள் யூத மதத்திற்கு எதிரான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

உலக நாடுகள் பலவற்றில் யூத எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மத சகிப்புத்தன்மைக்கு ஆதரவாக இவான்கா ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “அமெரிக்கா என்ற நாடு மத சகிப்புத்தன்மையால் உருவானது. நாம் நமது இல்லத்தை வழிபாடுகள் மற்றும் மத மையங்களால் பாதுகாக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

யூத மத பகைமையால், இவான்கா ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டதால் தான் இதனை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியதாக அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், ட்ரம்ப் தலைமையிலான அரசு யூத பகைமைக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த வியாழக்கிழமை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ட்ரம்ப்பிடம் யூத பத்திரிக்கை ஒன்று, “அதிகரித்து வரும் யூத பகைமையை எதிர்கொள்ள அரசு என்ன திட்டமிட்டுள்ளது?” என்று கேள்வி எழுப்பியதற்கு ட்ரம்ப் கோபமாக, “உலகிலேயே குறைந்த யூத எதிர்ப்புக்கொண்ட நபர் நான்தான்” என்று பதில் கூறினார்.

இந்த நிலையில், இவான்கா ட்ரம்ப் மத சகிப்புத்தன்மைக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்