நிரந்தர நியமனம் கோரி கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இரண்டாவது நாளாக போராட்டம்

நிரந்தர நியமனம் கோரி கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இரண்டாவது நாளாக போராட்டம்

நிரந்தர நியமனம் கோரி கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இரண்டாவது நாளாக போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

22 Feb, 2017 | 10:44 pm

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் நேற்று (21) ஆரம்பித்த போராட்டத்தினை இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுத்தனர்.

இவர்கள் மட்டக்களப்பு நகரிலுள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில், காலவரையற்ற சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை நேற்று ஆரம்பித்திருந்தனர்.

தமக்கான நிரந்தர நியமனம் தொடர்ந்தும் புறக்கணிப்பட்டு வருகின்றமையைக் கண்டிக்கும் வகையிலேயே இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களின் இன்றைய போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கலந்து கொண்டு அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்