ஏறாவூர் இரட்டைக் கொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

ஏறாவூர் இரட்டைக் கொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

22 Feb, 2017 | 7:20 pm

மட்டக்களப்பு – ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம்.ஐ.எம் ரிஸ்வி முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களை எதிர்வரும் மார்ச் மாதம்8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஏறாவூர் முகாந்திரம் வீதியிலுள்ள வீடொன்றினுள் 56 வயதான தாய் மற்றும் அவரது மகள் ஆகியோர் பொல்லால் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்