இலங்கைக்கு எதிரான மூன்றாவது T20 போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி

இலங்கைக்கு எதிரான மூன்றாவது T20 போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி

இலங்கைக்கு எதிரான மூன்றாவது T20 போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி

எழுத்தாளர் Bella Dalima

22 Feb, 2017 | 7:31 pm

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான T20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி 41 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

அவுஸ்திரேலிய மண்ணில் T20 போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது.

எனினும், இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தது.

இதன் பிரகாரம், முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.

அணி சார்பில் மைக்கல் கிளிங்கர் 62 ஓட்டங்களைக் குவித்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18 ஒவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரரான டில்ஷான் முனவீர அணி சார்பில் 37 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார்.

எவ்வாறாயினும், மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்