முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமை அண்மித்த பகுதியில் இன்றும்அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு

முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமை அண்மித்த பகுதியில் இன்றும்அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு

முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமை அண்மித்த பகுதியில் இன்றும்அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2017 | 1:16 pm

மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமை அண்மித்த பகுதியில் மனித எச்சங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் இரண்டாம் நாளாக இன்றும் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட இடத்தில் இன்றும் மனித எச்சங்கள் மற்றும் பற்கள் சில கண்டெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

அகழ்வுப் பணிகள் காலை 9 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு, முற்பகல் 10 மணியளவில் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்