500 மதுபானசாலைகளை மூடுதல் உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் முதல்வர் பழனிச்சாமி

500 மதுபானசாலைகளை மூடுதல் உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் முதல்வர் பழனிச்சாமி

500 மதுபானசாலைகளை மூடுதல் உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் முதல்வர் பழனிச்சாமி

எழுத்தாளர் Staff Writer

20 Feb, 2017 | 7:32 pm

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி கே. பழனிசாமி இன்று முதற்தடவையாக தலைமைச் செயலகத்திற்கு சென்று தனது பணியை தொடங்கியுள்ளார்.

முதலமைச்சர் பதவி தொடர்பில் நிலவி வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எடப்பாடி கே. பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றியீட்டியிருந்தார்.

இதற்கமைய இன்று காலை முதல் முறையாக அவர் தமிழகத்தின் தலைமைச்செயலகத்திற்கு சென்றிருந்தார்.

அதன்பின்னர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தமது கடமைகளை நிறைவேற்றிய, அறையில் ஐந்து கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.

உழைக்கும் மகளிருக்கான இருசக்கர வாகன மானியத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல், தமிழகத்தி்ல் மேலும் 500 மதுகடைக்களை மூடுதல் உள்ளிட்ட 5 கோப்புக்கள் அவர் கையெழுத்திட்டதாக தமிழக தகவலகள் தெரிவிக்கின்றன

ஜெயலலிதா ஜெயராமின் மறைவை அடுத்து முதலமைச்சராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம், தாம் பதவி வகித்த காலப் பகுதியில் ஜெயலலிதா பயன்படுத்திய முதலமைச்சர் அறை அல்லது அதிலிருந்த பொருட்கள் எதனையும் பயன்படுத்தவில்லை என என தமிழக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்